உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  போரால் வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள்

 போரால் வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள்

த ற்போதைய போர் சூழல் காரணமாக, அன்னிய முதலீட்டாளர்கள் மார்ச் 2ம் தேதி நிலவரப்படி 3,296 கோடி ரூபாய் நிகர மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி இருக்கின்றனர். அன்றைய தினத்தில் அவர்கள் வாங்கிய பங்குகளின் மதிப்பு 12,737 கோடி ரூபாயாகவும், விற்றது 16,033 கோடி ரூபாயாகவும் இருந்தது. அதேநேரம், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு பங்களிப்பு 21,111 கோடி ரூபாயாகவும்; விற்றது 12,517 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதன்படி கணக்கிட்டால் 8,598 கோடி ரூபாய்க்கு நிகர பங்குகளை உ ள்நாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியிருக்கின்றனர். நடப்பு ஆண்டில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தம் 50,581 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். அதேநேரம், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1.16 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை