மேலும் செய்திகள்
ரூபாய்க்கு கிடைக்கும் பலம்
24-Oct-2025
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமை அன்று, 88.00 என்பதை தாண்டி சென்ற ஒரு புயலுக்குப் பின், நேற்று சமநிலையில் முடிவடைந்தது. இது, 88.41 என்ற உயர்வை தொட்ட போதிலும், உறுதியுடன் பின்வாங்கியது. இது சரணடையாத, அமைதியான பலத்தின் வெளிப்பாடு. இந்த மாதத்தில், பிராந்தியத்திலுள்ள மற்ற கரன்சிகளை விட ரூபாய் சிறப்பாக செயல்படுகிறது. இந்தியாவில் பல முக்கிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக கிட்டத்தட்ட 41,000 கோடி திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெளிநாட்டுப் பங்கேற்பு, ரூபாய்க்கு ஸ்திரத்தன்மையை தர உதவும். அமெரிக்கா - சீனா வர்த்தக பேச்சை முன்னிட்டு, உலகளாவிய சந்தைகளில் சாதகமான மனநிலை நிலவுகிறது. இதனால், ரூபாய்க்கு இருந்த உடனடி அழுத்தம் குறைந்துள்ளது. இன்று வரவிருக்கும் பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவு கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. 25 அடிப்படைப் புள்ளிகள் வட்டி குறைப்புக்கு, 97.80% வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெடரல் வங்கியின் மென்மையான நிலைப்பாடு, டாலரின் மதிப்பை பலவீனப்படுத்தக்கூடும். ரூபாய், 88.40 அருகே வலுவான எதிர்ப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதரவு நிலை 87.60 - 87.70ஐ சுற்றி உள்ளது. ஆதரவு மண்டலமான 87.60 - 87.70ஐ உடைத்துக் கீழ்நோக்கிச் சென்றால், ரூபாய், 87.20 நிலையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அமித் பபாரி,நிர்வாக இயக்குநர்,சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்
24-Oct-2025