| ADDED : நவ 21, 2025 01:08 AM
இ ந் திய ரூபாய் நேற்று சரிவுடன் முடிந்தாலும், இது ஒரு பலவீனமான நகர்வாக கருத முடியாது. அமெரிக்கா மற்றும் கடன் சந்தைகளிலிருந்து வரும் நேர்மறை அறிகுறிகளால், ரூபாயின் போக்கு இன் னும் வலுவாகவே உள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இரு கட்சி ஆதரவு தீர்மானம், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவுடனான வலுவான ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளது. இது இந்திய--அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையை உயர்த்தி, ரூபாய்க்குச் சாதகமாகிறது. இந்தியாவின் கடன் பத்திரங்கள் 'புளூம்பெர்க் அக்கிரிகேட் இண்டெக்ஸில்' சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது 20 - 25 பில்லியன் டாலர்கள் வரையிலான வெளிநாட்டு நிதி வரவுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிப்பு: ரூபாய் மதிப்பு சரிந்தால், 88.80--89.00 என்ற அளவில் தடுப்புநிலை உள்ளது. அதேநேரம், 88.40 என்பது ஆதரவு நிலையாக இருக்கிறது. அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தரவுகள் டாலரின் நகர்வை தீர்மானிக்கும். எனினும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகள் சாதகமாக வலுப்பெற்றால், 88.00 - 87.70 என்ற நிலையை நோக்கி மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.