உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஃபோரக்ஸ் ரூபாய் மதிப்பு 91

ஃபோரக்ஸ் ரூபாய் மதிப்பு 91

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 91.14 என்ற புதிய வீழ்ச்சியை சந்தித்தது. இந்த ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 6 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஐந்து மாதங்களில் இல்லாத அளவாக, கடந்த நவம்பரில 24.53 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஏற்றுமதி 1.3 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. தரவுகள் வலுவாக இருந்தாலும், ரூபாயின் தற்போதைய பலவீனம், பொருளாதார அடிப்படைகளால் வரவில்லை; மாறாக, சந்தையின் நம்பிக்கைக் குறைவால் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சாதகமான நடைமுறைக்கு வரும் வரை, ரூபாய் மதிப்பு பலவீனமாகவே இருக்கக்கூடும். டாலர் பலவீனமாக இருப்பது, மற்ற வளரும் நாடுகளின் நாணயங்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆனாலும், இந்தியப் பங்குகள் மற்றும் கடன் சந்தைகளிலிருந்து தொடர்ச்சியாக வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் வெளியேற்றம் மற்றும் வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் ரூபாய்க்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை. மிகக் குறுகிய காலத்தில், ரூபாய் மதிப்புக்கு 90.00-90.20 வலுவான ஆதரவு நிலையாக உள்ளது. 91.20-91.50 என்பது முக்கிய தடை நிலையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை