உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஃபோரக்ஸ்: டாலரில் அழுத்தம் ஏறினால் ரூபாய் மூச்சு விடும்

ஃபோரக்ஸ்: டாலரில் அழுத்தம் ஏறினால் ரூபாய் மூச்சு விடும்

இந்திய ரூபாய்க்கு, இந்த வாரம் மீண்டும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தனித்தனி நிகழ்வுகளாகத் தெரிந்த தங்கக் கொள்முதல், விசா கட்டண உயர்வு, அரசியல் கருத்துகள் ஆகியவை ஒன்றிணைந்து, ரூபாயின் மதிப்பில் அதிக சுமையை ஏற்படுத்தி வருகின்றன. எதிர்கால பார்வை: அமெரிக்க பெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களை மேலும் குறைக்க வாய்ப்புள்ளதால், டாலரின் இந்த உயர்வு நீடிக்காமல் இருக்கலாம். அரசுக்கு நிதி ஒதுக்குவது குறித்த அமெரிக்க அரசியல் நிச்சயமற்ற தன்மை, டாலரின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தினால், ரூபாய்க்கு சிறிது மூச்சுவிட அவகாசம் கிடைக்கும். டாலருக்கு நிகரான ரூபாய் பரிமாற்ற விகிதம், 89.00 - 89.20-ல் எதிர்ப்பையும்; 88.40-ல் ஆதரவையும் சோதித்து வருகிறது. 88.20-க்கு கீழே நிலைபெற்றால், அது மாற்றத்திற்கான முதல் சமிக்ஞையாக இருக்கும். வர்த்தக பேச்சுகளில் முன்னேற்றம் அல்லது டாலர் குறியீட்டில் பலவீனம் ஆகியவை, ரூபாயின் மீட்சிக்கு ஆதரவாக அமையும். அமித் பபாரி,நிர்வாக இயக்குநர்,சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை