மேலும் செய்திகள்
பிளெக்ஸி கேப் பண்டுகளில் அதிகரிக்கும் ஆர்வம்
25-Nov-2025
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் கடந்த 1993ம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு மேலாண்மை நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், தற்போது 143 திட்டங்களை நிர்வகித்து வருகிறது. சிறப்பம்சங்கள்
இந்தியாவில் செயல்படும் பழம்பெரும் முதலீட்டு மேலாண்மை நிறுவனம்பங்குகள், கடன், ஹைப்ரிட் பண்டுகள், பண்டு ஆப் பண்டு, பி.எம்.எஸ்., ஏ.ஐ.எப்., மற்றும் அட்வைசரி சேவைகளை வழங்குவதுஇந்தியா முழுவதும் மிகப்பெரிய வினியோக நெட்வொர்க்கை கொண்டிருப்பதுசிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் அதிகப்படியான வாய்ப்புடிஜிட்டல் செயல்பாட்டால் முதன்முறை முதலீட்டாளர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களாக மாற்றிக்கொள்வது. ரிஸ்க்குகள்
சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்றாற்போல் நிர்வகிக்கும் சொத்தின் அளவில் ஏற்பட கூடிய வேகமான மாற்றம்ஏனைய ஏ.எம்.சி.,க்களிடம் இருந்து எதிர்கொள்ளும் கடுமையான போட்டிமுதலீடுகளை நிர்வகிப்பதற்கான கட்டணங்களில் செபி அறிவுறுத்தும் உச்ச வரம்பை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம்பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள், அரசின் கொள்கை முடிவுகள் போன்றவை வருமானத்தை பாதிக்க வாய்ப்புகுறைவான லாபம் தரும் திட்டங்களாக இருந்தால் முதலீட்டாளர்களிடம் நன்மதிப்பை இழக்கக்கூடும்.
25-Nov-2025