உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் பங்கு விலை 20% வீழ்ச்சி

 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் பங்கு விலை 20% வீழ்ச்சி

ஐ. டி.எப்.சி., வங்கியின் சண்டிகர் கிளையில் நடந்த 590 கோடி ரூபாய் மோசடி, அதன் பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய பங்கு வர்த்தகத்தில், இதன் பங்கு விலை 20 சதவீதம் சரிந்து 'லோயர் சர்க்யூட்' நிலைக்கு சென்றது. வர்த்தக முடிவில், 16 சதவீத சரிவுடன், 70 ரூபாய்க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது. பி.எஸ்.இ., தரவுகளின்படி, கடந்த வெள்ளி அன்று 71,854.85 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் சந்தை மூலதனம் 11,626 கோடி ரூபாய் சரிந்து, நேற்றைய வர்த்தக முடிவில் 60,228 கோடி ரூபாயாக குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை