அரசு பத்திரங்களில் ஆதாயம் அதிகரிப்பு
ச ர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்விலேயே நீடிப்பதால், அரசு பத்திரங்களின் விலை சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த போதிலும், கடல்வழி வணிக தடைகள் தொடர்வது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களை விற்பனை செய்து வருகின்றனர். பத்திரங்களின் விலை குறைந்து, 2035ம் ஆண்டு முடிவடையும் அரசு பத்திரங்களின் ஆதாயம் 6.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.