ஐ.ஓ.பி., டிஜிட்டல் ரூபாய் செயலி அறிமுகம்
பொதுத்துறை வங்கியான ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’, ரிசர்வ் வங்கியின் ‘டிஜிட்டல் ரூபாய்’ பரிவர்த்தனைகளுக்காக தனது பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் ரூபாய் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும், சி.பி.டி.சி. எனும், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் ஆகும். இது நமது கையில் வைத்திருக்கும் பணத்திற்கு இணையான சட்டப்பூர்வ டிஜிட்டல் வடிவம். இதன் வாயிலாக வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது ‘மொபைல் வாலெட்’ வழியாக டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தி வங்கிகள் தலையீடு இன்றி துரிதமான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.