ஐ.பி.ஓ.,
ரூ.20,000 கோடி திரட்டும் ஜவுளி விற்பனை கடைகள்
தெ ன் மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி விற்பனை நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 20,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளன. தெலுங்கானாவை சேர்ந்த ஆர்.எஸ்.பி., ரீடெய்ல் இந்தியா, மாரி ரீடெய்ல், தமிழகத்தின் போத்தீஸ், நல்லி சில்க் சாரீஸ் ஆகிய நிறுவனங்கள், அடுத்த 6 - 8 மாதங்களில் புதிய பங்கு வெளியீடுக்கு வருவதற்கு தயாராகி வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. கோடெக் ஹெல்த்கேர்
செபியிடம் விண்ணப்பம்
ம ருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சேவைகளை வழங்கி வரும் கோடெக் ஹெல்த்கேர், புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. உத்தரா கண்டின் ரூர்க்கியை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், முதலீட்டாளர்கள் வசமுள்ள 60 லட்சம் பங்குகளுடன், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக, 295 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டு உள்ளது. திரட்டப்படும் நிதியில் 226 கோடி ரூபாயை, தற்போதைய உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் பயன்படுத்த உள்ளது . டாடா கேப்பிடல்
அக்டோபரில் ஐ.பி.ஓ.,
அ க்டோபர் மாதத்தின் முதல் பாதியில், 17,200 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வர இருப்பதாக, டாடா கேப்பிடல் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்தின் வங்கி சாரா நிதி நிறுவனமான டாடா கேப்பிடல், விரைவில் இரண்டாவது முறையாக ரகசிய முறையில் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பருக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவு முடிவடையும் நிலையில், பங்கு வெளியீடுக்கு வர காலக்கெடுவை சில வாரங்களுக்கு நீட்டிக்க, டாடா கேப்பிடல் கோரிக்கை விடுத்துள்ளது.