ஐ.பி.ஓ.,
பாரத் கோக்கிங் கோல் க டந்தாண்டு புதிய பங்கு வெளியீடுக்கு வந்த, டாடா கேபிட்டல், எல்.ஜி., எலெக்ட்ரானிக்ஸ், வீவொர்க் இந்தியா உட்பட 24 நிறுவன பங்குகளின் லாக் - இன் காலம் இம்மாதம் காலாவதியாக உள்ளது. இதனால், இந்நிறுவனபங்கு களை வைத்துள்ள முதலீட்டாளர்கள் சந்தையில் பங்குகளை விற்றால், ஏற்ற, இறக்கங்களை சந்திக்க நேரிடும். ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு முன்னரே, அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் ஆரம்ப முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீடுக்கு பின், 6 முதல் 18 மாதங்கள் வரை பங்குகளை விற்க முடியாது என்ற விதி உள்ளது. இதுவே 'லாக் - இன்' காலம் என அழைக்கப்படுகிறது. இந்த காலம் முடியும் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தகுதி உடையவர்கள் ஆகின்றனர். அந்த வகையில், 2025 டிசம்பர் முதல் 2026 மார்ச் வரை, கிட்டத்தட்ட 106 நிறுவனங்களின் 'லாக் - இன்' காலம் முடிவடை ய உள்ளது. இதன் மதிப்பு 2.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, தரகு நிறுவனமான நுவாமா தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பங்கு களை விற்று, லாபத்தை ஆரம்ப முதலீட்டாளர்கள் எடுக்கும் போது, அந்நிறுவன பங்குகளின் விலை சரிய வாய்ப்புள்ளது.