உள்ளூர் செய்திகள்

 ஐ.பி.ஓ.,

'மணிபால் ஹெல்த்' 5 மடங்கு விண்ணப்பம் 'ம ணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் இறுதி நாளான நேற்று, கிட்டத்தட்ட 5 மடங்கு விண்ணப் பங்கள் பெறப்பட்டு உள்ளன. என்.எஸ்.இ., வெளியி ட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, விற்பனைக்கு வைக்கப்பட்ட 9 கோடி பங்குகளுக்கு எதிராக 44.30 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. தகுதிபெற்ற நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்களை விட 8.25 மடங்கு விண்ணப்பங்களும், உயர் நிகர மதிப்பு கொண்ட முதலீட்டாளர்களின் பிரிவில் 1.02 மடங்கு விண்ணப்பங்களும், சிறு முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 93 சதவீதம் பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்க ளும் பெறப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் பங்குகள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ