மேலும் செய்திகள்
சந்தை துளிகள்
24-Dec-2025
ஜெப்டோ கு யிக் காமர்ஸ் நிறுவனமான ஜெப்டோ, ரகசிய விண்ணப்ப முறையில் இன்று புதிய பங்கு வெளியீடுக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவைத் தலைமை யிடமாக கொண்ட இந்நிறுவனம், கடந்த 2020ல் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 6 ஆண்டு க ளுக்குள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது. இதன் வாயிலாக, இந்திய பங்குச்சந்தைக்கு வரும் 'இளம் யுனிகார்ன்' நிறுவனம் என்ற பெயரை பெற உள்ளது. இதற்கு முன், 'மாமாஎர்த்' பிராண்டின் 'ஹோன்சா கன்ஸ்யூமர்' துவங்கப்பட்டு, 7 ஆண்டுகளுக்கு பின் புதிய பங்கு வெளியீடுக்கு வந்திருந்தது. யாடயாத் கார்ப்பரேஷன் இந்தியா கு ஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த ' யாடயாத் கார்ப்பரேஷன் இந்தியா' நிறுவனம் புதிய பங்கு வெளியீடுக்கு விண்ணப்பித்துள்ளது. போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் துறையில் உள்ள இந்நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 77 லட்சம் புதிய பங்குகளுடன், ஆரம்ப கட்ட முதலீட்டாளர்கள் வசமுள்ள 56 லட்சம் பங்குகள் சேர்த்து, 1.33 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் திரட்டப்படும் தொகையை, மூலதன செலவுகளுக்கும், நிறுவனத்தின் பிற செலவுகளுக்கும் பயன்படுத்த உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
24-Dec-2025