மேலும் செய்திகள்
நிப்டியில் பலவீனமே அதிகமாக தென்படுகிறது
29-Sep-2026
கவனம் ஈர்த்த பங்குகள்
29-Sep-2026
சந்தை துளிகள்
29-Sep-2026
தினம் ஒரு பங்கு
28-Sep-2026
நிறுவன அறிவிப்புகள்
28-Sep-2026
சூரத்தை சேர்ந்த 'ஜே.பி., ஈகோடெக்ஸ்' நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 400 கோடி ரூபாய் திரட்ட செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதனுடன், நிறுவனத்தின் புரமோட்டர்கள் வசம் உள்ள 1.29 கோடி பங்குகள் வரை விற்பனை செய்யப்பட உள்ளன.மேலும், ஐ.பி.ஓ.,வுக்கு முன்பாக ரூ.80 கோடி வரை பங்குகளை விற்பனை செய்ய நிறுவனம் பரிசீலித்து வருகிறது. புதிய பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் தொகையில் கடனை திருப்பி செலுத்த 320 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை மறுசுழற்சி செய்து பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறது. 'அசெட்குரோ பின்டெக்' ஆவணங்கள் தாக்கல்
'ஸ்டாக் குரோ' தளத்தை நடத்தும் 'அசெட்குரோ பின்டெக்' நிறுவனம், 2,000-2,500 கோடி ரூபாய் திரட்ட ஐ.பி.ஓ., ஆவணங்களை செபியிடம் ரகசிய முறையில் தாக்கல் செய்துள்ளது. இந்த ஐ.பி.ஓ.,வில் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகள் வெளியிடப்படலாம் என்றும், மீதமுள்ள தொகை ஏற்கனவே உள்ள பங்குதாரர்களின் பங்குகள் விற்பனை வாயிலாக திரட்டப்படலாம் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்டாக் குரோ தளம் பங்கு ஆய்வு, முதலீட்டு உத்தி உருவாக்கம், போர்ட்போலியோ கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.
29-Sep-2026
29-Sep-2026
29-Sep-2026
28-Sep-2026
28-Sep-2026