‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ 3வது இடத்துக்கு இறங்கியது
சந்தை மதிப்பு அடிப்படையில் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ 17.83 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்ட நிலையில், ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிஉள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 2.81 சதவீத ஏற்றத்துடன் 2,120 ரூபாயில் நிறைவடைந்ததால் இதன் சந்தை மதிப்பு 13 லட்சம் கோடியை தொட்டுள்ளது. அதே நேரத்தில், ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்கு விலை இரண்டு சதவீதம் சரிந்து 1,390 ரூபாயில் முடிந்ததால் இதன் சந்தை மதிப்பு 12.94 லட்சம் கோடியாகி மூன்றாவது இடத்துக்கு சரிந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து வலுவான லாபத்தை ஈட்டி வருவதும், இதன் சராசரி வருவாய் உயர்ந்து வருவதும் சந்தை மதிப்பு உயர முக்கிய காரணமாக தெரிகிறது.