உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / விடைபெறுகிறது கொல்கட்டா பங்குச்சந்தை

விடைபெறுகிறது கொல்கட்டா பங்குச்சந்தை

மும்பை பங்குச் சந்தைக்குப் போட்டியாக, கடந்த 1908ம் ஆண்டு துவங்கப்பட்ட 117 ஆண்டுகள் பழமையான, கொல்கட்டா பங்குச் சந்தை, விடைபெற உள்ள நிலையில் இதுவே அதன் கடைசி தீபாவளியாக இருக்கக்கூடும். இந்தியாவின் பழமையான பங்குச்சந்தைகளில் ஒன்றான கொல்கட்டா பங்குச்சந்தை, செபி விதிகளுக்கு இணங்காததால், கடந்த 2013 ஏப்ரலில் வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மீண்டும் வர்த்தகத்தை துவங்க நீதிமன்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், பலன் அளிக்காததால், பங்குச்சந்தை வணிகத்தில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து பங்குச் சந்தை உரிமத்தை தானாக முன்வந்து ரத்து செய்ய கோரி செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை