மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ., துளிகள்
1 hour(s) ago
போரக்ஸ்: நிலைபெற்று வரும் ரூபாய் மதிப்பு
25-Dec-2025
தொலைந்துபோன அல்லது சேதமடைந்த பங்கு சான்றிதழ்களின் நகலை பெறும் நடைமுறையை, செபி எளிமைப்படுத்தியுள்ளது. தொலைந்து போன பங்கு சான்றிதழ்களின் மதிப்புக்கு ஏற்றாற்போல், நகலை பெற அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. முக்கிய அம்சங்கள் * ரூ.10,000 வரை: சாதாரண காகிதத்தில் அளிக்கப்படும் பரிந்துரைக்கப்பட்டுள்ள உறுதிமொழி போதுமானது * ரூ.10 லட்சம் வரை: 1.முன்பு 5 லட்சம் ரூபாய் வரை இருந்த எளிய நடைமுறை, இப்போது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2.நோட்டரி செய்யப்பட்ட 'அபிடவிட்- கம் -இன்டெம்னிட்டி பாண்ட்' சமர்ப்பித்தால் போதுமானது. * ரூ.10 லட்சத்திற்கு மேல்: 1.நோட்டரி செய்யப்பட்ட அபிடவிட் -கம் -இன்டெம்னிட்டி பாண்ட் 2.காவல் துறை புகார்(எப்.ஐ.ஆர்.,) அல்லது நீதிமன்ற உத்தரவு தேவை 3.சம்பந்தப்பட்ட நிறுவனம் இது குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும் (இதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை முதலீட்டாளர் செலுத்த வேண்டும்) முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் பயன்கள்: 1.குறைந்த ஆவணங்கள் 2.நேரமும் செலவும் குறைவு 3.அதிக மதிப்புள்ள பங்குகளுக்கும்(ரூ.10 லட்சம் வரை) சுலபமான நடைமுறையின் வாயிலாக நகல் கிடைக்கும் 4.ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் 5.முதலீட்டாளர்கள் தொலைந்து போன தங்களின் பங்குகளை விரைவாகவும் எளிதாகவும் மீட்டெடுக்க முடியும்
1 hour(s) ago
25-Dec-2025