மஹாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட்
'கோல் இந்தியா' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'மஹாநதி கோல்பீல்ட்ஸ்', 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நாட்டின் மிகப்பெரிய தனிப்பட்ட நிலக்கரி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 21 சதவிகித பங்களிப்பை கொண்டுள்ளது. மின்சார உற்பத்தி, சிமென்ட், இரும்பு மற்றும் ஸ்டீல் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளுக்கு தேவையான நிலக்கரியை வழங்குகிறது. நிறுவனத்தின் வருவாயில் பெரும்பகுதி, நீண்டகால எரிபொருள் வினியோக ஒப்பந்தங்கள் வாயிலாக கிடைக்கிறது. திறந்தவெளி சுரங்கங்களில் அதிகளவு நிலக்கரி எடுப்பதுடன், இயந்திரமயமாக்கப்பட்ட சுரங்க பணிகள் மற்றும் தோண்டி எடுத்த நிலக்கரியை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ரயில் போக்குவரத்து இணைப்பு வசதிகளையும் நிறுவனம் கொண்டுள்ளது. கடந்த 2025-26ம் நிதியாண்டில் கோல் இந்தியா குழுமத்தின் மொத்த நிலக்கரி உற்பத்தியில், இந்நிறுவனத்தின் பங்களிப்பு 28.40 சதவிகிதமாக இருந்தது. சிறப்பம்சங்கள் ஒடிசாவில் உள்ள 'தால்செர்' மற்றும் 'இப் வேலி' சுரங்க பகுதிகளில் கணிசமான நிலக்கரி வளங்களை கொண்டுள்ளது திறந்தவெளி சுரங்கங்கள், இயந்திரமயமாக்கப்பட்ட பணிகள் வாயிலாக உற்பத்தி செலவை கட்டுப்படுத்துகிறது மின்சார உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுடன் நீண்டகால வணிக உறவுகளை கொண்டுள்ளது நிலக்கரியை கொண்டு செல்வதற்கான ரயில் பாதைகள், சரக்குகளை கையாளும் மையங்கள், விரைவான சரக்கு ஏற்றும் வசதிகள் மற்றும் துறைமுக இணைப்புகளை கொண்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்க முடிகிறது கடன் சுமை குறைவாக உள்ள நிறுவனமாக இருப்பதுடன், தொடர்ந்து டிவிடெண்டு வழங்கி வருகிறது. இடர்கள் வருவாய் பெரும்பாலும் நிலக்கரி விற்பனையை சார்ந்துள்ளது. நிலக்கரிக்கான தேவை குறைந்தாலோ, மாற்று எரிசக்தி பயன்பாடு அதிகரித்தாலோ விற்பனை பாதிக்கப்படலாம் மின்சார துறையை சார்ந்த வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும்பகுதி வருவாய் கிடைக்கிறது. சில பெரிய வாடிக்கையாளர்களை அதிகம் சார்ந்திருப்பதால், அவர்களது கொள்முதல் குறைந்தால், வருவாய் பாதிக்கப்படலாம் நீண்டகால ஒப்பந்தங்களின் கீழ் விற்பனை விலை நிர்ணயிக்கப்படுவதால், சந்தை விலைக்கு ஏற்ப விலையை மாற்றியமைக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது வாடிக்கையாளர்களிடமிருந்து வர வேண்டிய நிலுவை தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில மாநில மின்சார வாரியங்களிடமிருந்து பணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டால், நிறுவனத்தின் பணப்புழக்கம் மற்றும் செயல்பாட்டு மூலதனம் பாதிக்கப்படலாம் நிலக்கரி வளங்கள் தொடர்ந்து குறைந்து வருவதுடன், எதிர்காலத்தில் எளிதாக கிடைக்கும் உயர்தர நிலக்கரி குறைந்தால் உற்பத்தி செலவு அதிகரிக்கக்கூடும்.
தொடங்கும் தேதி: 19.11.2026
முடியும் தேதி: 23.11.2026ஒதுக்கீடு தேதி: 25.11.2026பட்டியலிடப்படும் நாள்: 27.11.2026 (உத்தேசமாக)திரட்டப்படும் தொகை : ரூ.8,981.12 கோடிகள் வரைமுக மதிப்பு: ரூ.2விலை வரம்பு: ரூ.129 - 136குறைந்த பட்ச அளவு : 110 பங்குகள்குறைந்தபட்ச முதலீடு: ரூ.14,190 கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்கவேண்டும்