உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமைப் பங்குகள் வெளியீட்டிற்கான பதிவு தேதியை நிர்ணயித்ததைத் தொடர்ந்து, 'ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி' பங்குகள், விலை வர்த்தகத்தின் இடையே 14 சதவீதம் வரை உயர்ந்தது. உரிமைப் பங்குகள் வாயிலாக 1,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கான பதிவு தேதி டிசம்பர் 5 என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏசியன் பெயிண்ட்ஸ்' 'ஏசியன் பெயிண்ட்ஸ்' நிறுவன பங்குகள் விலை கடந்த 2 மாதங்களில் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட், தொழில் துறை தேவைகள் மற்றும் பண்டிகைகள் போன்ற காரணங்களால் இரண்டாவது அரையாண்டில் விற்பனை வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது. பேங்க் ஆப் மகாராஷ்டிரா 'பேங்க் ஆப் மகாராஷ்டிரா' வங்கியில், தனது 6 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்து, 2,600 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. நிறுவன முதலீட்டாளர்களுக்கான விற்பனை நேற்று துவங்கிய நிலையில், இவ்வங்கி பங்குகளை வாங்க, இன்று சிறு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். எம்வீ போட்டோவோல்டாயிக் வருவாய் அதிகரித்ததையடுத்து, 'எம்வீ போட்டோவோல்டாயிக்' நிறுவன பங்குகள், வர்த்தகத்தின் இடையே 10 சதவீதம் உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இரண்டாவது காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 5 மடங்குக்கும் மேல் உயர்ந்து, 237.86 கோடி ரூபாயாக அதிகரித்தது. ஸ்விக்கி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான 'ஸ்விக்கி', தனது பங்குகளை தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்து 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியானது. இதையடுத்து, இந்நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை உயர்ந்தன. வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏ.ஜி.ஆர்., நிவாரண கோரிக்கையை, நடப்பாண்டிற்குள் இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். இதையடுத்து, ' வோடபோன் ஐடியா' நிறுவன பங்கு விலை நேற்று 2.42 சதவீதம் உயர்ந்தது. மூன்று மாதங்களில் இந்நிறுவன பங்குகள் விலை 81 சதவீதம் உயர்ந்திருப்பது கவனம்பெறுகிறது. எக்ஸாடோ டெக்னாலஜிஸ் 'எக்ஸாடோ டெக்னாலஜிஸ்' நிறுவன ஐ.பி.ஓ.,வின் இறுதி நாளில், பங்குகளை விற்க நிறுவனம் வைத்திருந்த இலக்கை விட 700 மடங்கிற்கும் மேல் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, தகவல் வெளியாகின. இதையடுத்து, கிரே மார்க்கெட் பிரீமியம் 107 சதவீதமாக உயர்ந்தது. டாரென்ட் 'டாரென்ட் கேஸ்' நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 4,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த ஐ.பி.ஓ.,வை நிர்வகிக்க 'ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்தரா கேபிடல், சிட்டிகுரூப்' ஆகியவை நியமிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை