நெக்டர் லைப் சயின்சஸ் 'நெ க்டர் லைப் சயின்சஸ்' நிறுவனம், 51 சதவீத பிரீமியத்தில், 81 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்குவதாக அறிவித்ததையடுத்து, இந்நிறுவன பங்குகள், நேற்று 18 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன. இந்த திட்டத்தில் புரமோட்டர்கள் மற்றும் புரமோட்டர் குழுவினர் பங்கேற்கமாட்டார்கள் எனவும், தகுதியுள்ள பங்குதாரர்களை தீர்மானிக்க, டிசம்பர் 24 பதிவு தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ 'இ ண்டிகோ' விமான நிறுவனத்தின் தாய் நிறு வனமான 'இன்டர்குளோப் ஏவியேஷன்ஸ்' பங்குகள், நேற்று 3 சதவீதம் சரிந்தன. கடந்த இரண்டு நாட்களில், நாடு முழுதும் 250 முதல் 300 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பெரிய அளவிலான விமான செயல்பாட்டு சிக்கல்கள் மற்றும் தாமதங்களும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பெஸ்ட் அக்ரோலைப் நே ற்றைய வர்த்தகத்தில், 'பெஸ்ட் அக்ரோலைப்' பங்குகள் 7 சதவீதம் வரை உயர்ந்தன. இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு, பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் பங்குகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததே, இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. நிப்டி ஐ.டி., குறியீடு 'நி ப்டி ஐ.டி., குறியீடு' தொடர்ந்து இரண்டாவது நாளாக 2 சதவீதம் உயர்ந்து, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது. ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் 'டி.சி.எஸ்., இன்போசிஸ், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்' போன்ற நிறுவன பங்குகளின் விலை, 9 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. ஐ.சி.ஐ.சி. ஐ ., புருடென்ஷியல் 'ஐ . சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல்' மியூச்சுவல் பண்டு, 'எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனத்தில், கூடுதலாக 12.96 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. இதனால், 'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல்' மியூச்சுவல் பண்டின் மொத்த பங்கு விகிதம், 5 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் 'ப ஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ்' பங்குகள், கடந்த ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்து, அதன் ஐ.பி.ஓ., விலையை நோக்கி செல்கிறது. அதன் புரமோட்டர் நிறுவனமான 'பஜாஜ் பைனான்ஸ்' 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றது, மேலும் அதிக பங்குகள் விற்பனைக்கு வரக்கூடும் என்ற அச்சத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்நிறுவனம் தொடர்ச்சியாக வலுவான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது.