உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

போன்பே செயலியில் மியூச்சுவல் பண்டு முதலீடு

பயனர்கள் தங்கள் செயலி வாயிலாக, தினமும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம் என, பேமென்ட்ஸ் செயலியான 'போன்பே' அறிவித்துள்ளது. 'போன்பே வெல்த் புரோக்கிங்' அறிமுகம் செய்துள்ள புதிய சேவையில், நாளொன்றுக்கு 10 ரூபாய் முதல் பங்கு, தங்கம் மற்றும் மல்டி அசெட் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் ஈவுத்தொகை அறிவிப்பு

நா ட்டின் மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' பங்கு ஒன்றுக்கு 5 ரூபாய் ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. இதற்கான ரிக்கார்டு தேதி டிச.,18 என நிர்ணயித்துள்ளது. இதன்படி, 51.5 சதவீத பங்குகளை வைத்துள்ள அரசுக்கு, மொத்தம் 3,636 கோடி ரூபாயும், 29.2 லட்சம் சிறு பங்குதாரர்களுக்கு, 400 கோடி ரூபாயும் ஈவுத்தொகையாக செலுத்த உள்ளது. வரும் 2026, ஜன., 11 அல்லது அதற்கு முன் ஈவுத்தொகை பங்குதாரர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி