தங்கம், வெள்ளி வர்த்தகத்தில் எம்.சி.எக்ஸ்., ஆப்ஷன் முறை
எம் . சி.எக்ஸ்., எனப்படும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச், தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் மாதாந்திர ஆப்ஷன் ஒப்பந்த முறையை அறிமுகம் செய்துள்ளது. எம்.சி.எக்ஸின் புல்டெக்ஸ் குறியீட்டில் முன்பேர ஒப்பந்த வர்த்தகம் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. தற்போது ஆப்ஷன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், முதலீட்டாளர்கள் குறைந்த செலவில் தங்கம் மற்றும் வெள்ளி ஒப்பந்தங்களில் முதலீடு செய்ய முடியும். கூடுதலாக, பியூச்சர் எனப்படும் முன்பேர வர்த்தம் செய்பவர்கள், தங்களது ஒப்பந்தத்திற்கு எட்ஜிங் எனப்படும் எதிர்நிலையை எடுக்க இது உதவும். இதனால், முதலீடுகளில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யலாம். இந்தியாவில் பண்டக சந்தை வரலாற்றில் ஒரு முக்கிய முன்னேற்றம் என, எம்.சி.எக்ஸ்., தலைமை செயல் அதிகாரி பிரவீணா ராய் கூறியுள்ளார். எம்.சி.எக்ஸ்., புல்டெக்ஸ் குறியீட்டில் ஆப்ஷன் வர்த்தகமும் செய்யலாம் குறைந்த செலவில் தங்கம், வெள்ளி ஒப்பந்தங்களில் முதலீடு செய்யலாம் பியூச்சர் ஒப்பந்தங்களுக்கு எட்ஜிங் செய்ய முடிவதால் இழப்பை ஈடுசெய்யலாம்