1000 சதவிகிதம் லாபத்தை அள்ளி தந்த மல்டிபேகர்ஸ்!
நடப்பாண்டில் இதுவரையிலான நாட்களில், 9 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள், கிட்டத்தட்ட 1,000 சதவீதம் லாபத்தை அள்ளி சென்றிருக்கின்றனர். நடப்பாண்டில் நிப்டி 8 சதவீதமும், சென்செக்ஸ் 7 சதவீதமும் உயர்ந்துள்ளன.இந்நிலையில், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, ஸ்மால்கேப் பிரிவில் உள்ள சில நிறுவனங்கள் தான் இப்படி முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளன.