உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.பி.ஓ.,வுக்கு தயாராகும் முத்துாட் பின்கார்ப்

 ஐ.பி.ஓ.,வுக்கு தயாராகும் முத்துாட் பின்கார்ப்

'முத்தூட் பின்கார்ப்' நிறுவனம், புதிய ஐ.பி.ஓ., வெளியீடு வாயிலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி திரட்ட நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐ.பி.ஓ.,வுக்கு முன்பாக, தற்போது 10 ரூபாய் முக மதிப்புள்ள ஒரு பங்கினை, 2 ரூபாய் முக மதிப்புள்ள 5 பங்குகளாக (1:5 என்ற விகிதத்தில்) பிரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், பங்கின் விலை குறைந்து, சிறு முதலீட்டாளர்கள் எளிதாக வாங்க முடியும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் வரையும் நிதி திரட்டவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2025--26 நிதியாண்டின் மார்ச் மாத நிலவரப்படி, நிறுவனத்தின் நிர்வகிப்பு சொத்து மதிப்பு 56,185 கோடி ரூபாயாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 1,640 கோடி ரூபாயாகவும் இருந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை