வாகன துறையில் குவியும் மியூச்சுவல் பண்டு முதலீடுகள்
அண்மைக் காலமாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், வாகனத் துறையில் அதிகம் முதலீடு செய்து வருகின்றன. வாகனத் துறை நிறுவனங்களில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் முதலீடு, கடந்த ஆகஸ்டில் 10 மாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம், மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, அசோக் லேலண்ட் மற்றும் எம்.ஆர்.எப்., உள்ளிட்ட நிறுவனங்களில் அதிக அளவிலான பங்குகளை வாங்கியுள்ளன. வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றன.