உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.சி.டி., வெளியிடுகிறது முத்துாட் பின்கார்ப்

 என்.சி.டி., வெளியிடுகிறது முத்துாட் பின்கார்ப்

முத்துாட் பின்கார்ப், என்.சி.டி., எனும் பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீடு வாயிலாக, 600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடன் பத்திரத்தின் விலை 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றை, 24, 36, 60, 72 மாத கால அளவைக் குறிப்பிட்டு வாங்கிக்கொள்ளலாம். இவற்றுக்கு 8.70 முதல் 9.10 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். பொதுமக்கள் வரும் 16ம் தேதி வரை கடன் பத்திரங்களை வாங்க விண்ணப்பிக்கலாம். இந்த பத்திரங்களுக்கு 'கிரிசில் ரேட்டிங்' நிறுவனத்தின் 'ஏஏ-/பாசிட்டிவ்' மற்றும் 'பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ்' நிறுவனத்தின் 'பி.டபிள்யு.ஆர்., ஏஏ/ஸ்டேபிள்' தரவரிசை புள்ளிகள் வழங்கப்பட்டு உள்ளன. இப்பத்திரங்கள், மும்பை பங்குச் சந்தையின் கடன் பத்திரங்கள் பிரிவில் பட்டியலிடப்படும். கடன் பத்திர வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் தொகை, கடன் வர்த்தகம், கடன்களை திரும்பச் செலுத்துதல் மற்றும் நிறுவன செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை