என்.எப்.ஓ.,
'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் டைபர்சிபைடு ஈக்விட்டி ஆல் கேப் ஆக்டிவ் எப்.ஓ.எப்.,' குறைந்தபட்ச முதலீடு : ரூ.100 துவங்கிய நாள் : மார்ச் 2, 2026 நிறைவு நாள் : மார்ச் 16, 2026 நோக்கம் : ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக நீண்டகால மூலதன வளர்ச்சியை ஈட்டுவதாகும். இருப்பினும், இத்திட்டத்தின் முதலீட்டு நோக்கம் நிறைவேற்றப்படும் என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. 'பஜாஜ் லைப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் பண்டு' விண்ணப்பிக்க: இத்திட்டத்தில் வரும் மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டு முறை: இது ஒரு 'யூனிட் லிங்க்டு' பண்டு. இதில் முதலீட்டு வளர்ச்சியுடன் ஆயுள் காப்பீடும் கிடைக்கும். பங்குச் சந்தை ஒதுக்கீடு: லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளில் 60 முதல் 75 சதவீதம் வரை முதலீடு செய்யப்படும். குறிப்பாக ஆட்டோமொபைல், பார்மா மற்றும் நுகர்வோர் துறைகளில் கவனம் செலுத்தப்படும். ரிஸ்க் அளவு: மிக அதிகம் யாருக்கு ஏற்றது: பங்குச்சந்தை வாயிலாக நீண்டகால லாபத்தை எதிர்பார்க்கும் அதே வேளையில் காப்பீடு பாதுகாப்பையும் விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றது.