| ADDED : டிச 23, 2025 01:00 AM
டாடா ஏ.ஐ.ஏ.,யின் புதிய பண்டுகள்
டா டா ஏ.ஐ.ஏ., ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 'மல்டிகேப் ஆப்பர்சூனிட்டீஸ் பண்டு மற்றும் பென்ஷன் பண்டு' ஆகிய இரண்டையும் யூலிப் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோர், டிசம்பர் 24 - 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நிப்டி 500 குறியீட்டில் உள்ள லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் என அனைத்து வகையான நிறுவனங்களிலும் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதே, இந்த திட்டங்களின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியலின் புதிய பண்டு
ஐ .சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் நிறுவனம், யூலிப் வகையில் 'செக்டார் லீடர் இண்டெக்ஸ் பண்டை' அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 1,000 ரூபாயிலிருந்து முதலீட்டை துவங்கலாம். பி.எஸ்.இ., இந்தியா செக்டார் லீடர்ஸ் குறியீட்டில் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு இந்த திட்டம் செயல்படும். சந்தை அபாயங்களுக்கு உட்பட்ட யூலிப் திட்டங்கள், காப்பீடு மற்றும் முதலீடு ஆகிய இரண்டையும் இணைத்து வழங்குகின்றன.