உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / என்.எப்.ஓ., : ஜீரோதாவின் புதிய பண்டு

என்.எப்.ஓ., : ஜீரோதாவின் புதிய பண்டு

'ஜீரோதா'வின் புதிய பண்டு 'ஜீ ரோதா பண்டு ஹவுஸ்' சொத்து மேலாண்மை நிறுவனம், 'ஜீரோதா பி.எஸ்.இ., சென்செக்ஸ் இண்டெக்ஸ்' எனும், புதிய பண்டு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, பி.எஸ்.இ., சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றுள்ள, இந்தியாவின் முன்னணி 30 நிறுவனங்களின் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில், வெளிப்படையாக முன்னணி நிறுவனங்களில் நேரடியாக முதலீடு செய்யும் வாய்ப்பை இது வழங்கும். மேலும், நீண்டகால அடிப்படையில், அபாயத்தைக் குறைக்கும் விதத்தில் பலதரப்பட்ட முதலீடுக்கான வாய்ப்பையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கும். புதிய பண்டுக்கு விண்ணப்பிக்க வரும் நவ., 3ம் தேதி கடைசி நாளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை