நிப்டி 26,610 வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது
நிப்டி 25,819ல், ஏற்றத்தை தொடரும் வகையில் முக்கிய சராசரிகள் அனைத்திற்கும் மேலே நிறைவடைந்துள்ளது. மேலும், போலிங்கர் பேண்டு விரிவடைந்து வருகிறது. மொமென்டம் இண்டிக்கேட்டர்களின் வேகம் சற்று குறைந்திருந்தாலும் ஏற்றத்திற்கு சாதகமாகவே உள்ளது. ஆர்.எஸ்.ஐ., ஓவர்பாட் நிலையை அடைந்துள்ளது. ரெகுலர் ஸ்டோக்காஸ்ட்டிக், ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளதை காட்டும் நிலையில், பாஸ்ட் ஸ்டோக்காஸ்ட்டிக் ஏற்றத்திற்கு சாதகமான அறிகுறியை வெளிப்படுத்துகிறது. டைரக்ஷனல் இண்டிக்கேட்டர்களும், வாங்கும் அழுத்தம் விற்கும் அழுத்தத்தை விட அதிகமாக இருப்பதை காட்டுகின்றன. ஏ.டி.எக்ஸ்., ஏற்றத்திற்கான பலம் அதிகமாக இருப்பதை உணர்த்துகிறது. ஆன் பேலன்ஸ் வால்யுமும் ஏற்றத்திற்கு ஆதரவான வாங்கும் போக்கு நீடிப்பதை உணர்த்துகிறது. எம்.ஏ.சி.டி.,யும் பாசிட்டிவ்வாக இருப்பது, புல்லிஷ் மொமென்டம் தொடர்வதை குறிக்கிறது. மொத்தத்தில் டிரெண்டு பாசிட்டிவ்வாக இருக்கிறது. 25,952 மற்றும் 26,610ல் உடனடி ரெசிஸ்டென்ஸும், 25,619 மற்றும் 25,378ல் உடனடி சப்போர்ட்டும் இருக்கின்றன. 25,952க்கு மேலே சென்று நிலைத்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. டைரக்ஷனல் இண்டிக்கேட்டர்களும், வாங்கும் அழுத்தம் விற்கும் அழுத்தத்தை விட அதிகமாக இருப்பதை காட்டுகின்றன இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள் | நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் | 25.11.26 இறுதி விலை | கவனிக்க வேண்டிய விலை | டெக்னிக்கல் சப்போர்ட் | டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் | டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்பாரத் எலக்ட்ரானிக்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :5.10 ஆர்.ஓ.சி., :2.10 ஆர்.எஸ்.ஐ., :59.98) | 404.30 | 398 | 392 | 408 | 2, 5செல்லோ வேர்ல்டு (எம்.ஏ.சி.டி.,(12,26) :5.16 ஆர்.ஓ.சி., :3.99 ஆர்.எஸ்.ஐ., :61.36) | 378.00 | 372 | 366 | 382 | 2, 5இ.பி.எல்., (எம்.ஏ.சி.டி.,(12,26) :1.40 ஆர்.ஓ.சி., :6.59 ஆர்.எஸ்.ஐ., :53.80) | 234.10 | 230 | 224 | 240 | 2, 5கிராபைட் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26) :6.97 ஆர்.ஓ.சி., :9.34 ஆர்.எஸ்.ஐ., :56.42) | 789.00 | 783 | 771 | 801 | 2, 5பவர் கிரிட் கார்ப்பரேஷன் (எம்.ஏ.சி.டி.,(12,26) :2.0 ஆர்.ஓ.சி., :2.64 ஆர்.எஸ்.ஐ., :57.20) | 266.75 | 261 | 255 | 271 | 6