உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.ஐ.ஐ.எப்., கூடுதல் நிதி: உட்கட்டமைப்பு பங்குகள் உயர்வு

 என்.ஐ.ஐ.எப்., கூடுதல் நிதி: உட்கட்டமைப்பு பங்குகள் உயர்வு

'எ ன்.ஐ.ஐ.எப்., பண்டு'க்கு கூடுதலாக 30,000 கோடி ரூபாய் பங்களிக்க அரசு முடிவு செய்துள்ளதால், கேபிட்டல் கூட்ஸ் மற்றும் உட்கட்டமைப்பு துறை பங்குகள் உயர்ந்துள்ளன. என்.ஐ.ஐ.எப்., எனப்படும் தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியில் கூடுதலாக 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்துடன், அரசின் மொத்த பங்களிப்பு இரட்டிப்பாகி 60,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கூடுதல் நிதியை போக்குவரத்து, எரிசக்தி, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, நகர்ப்புற உட்கட்டமைப்பு, எலக்ட்ரிக் போக்குவரத்து போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் நேற்று வர்த்தகத்தில் 'எல்&டி., கே.இ.சி., இன்டர்நேஷனல், என்.சி.சி., ஜீனஸ் பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர்' உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் கேபிட்டல் கூட்ஸ் துறை பங்குகள் உயர்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை