சிறுசேமிப்பு வட்டியில் மாற்றமில்லை
புதுடில்லி :சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டும், சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் குறித்து மறுஆய்வு செய்து அறிவிப்பு வெளியிட ப்படுகிறது. அதன்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டுக்கு, பி.பி.எப்., சுகன்யா சம்ருதி, கே.வி.பி., மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, என்.எஸ்.சி., அஞ்சலக சேமிப்பு ஆகிய கணக்குகளில், வட்டி மாற்றமின்றி நீடிக்கும்.