உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.பி.ஓ., வெளியிடும் பணிகள் விரைவுபடுத்தியது என்.எஸ்.இ.,

 ஐ.பி.ஓ., வெளியிடும் பணிகள் விரைவுபடுத்தியது என்.எஸ்.இ.,

நா ட்டின் மிகப்பெரிய பங்கு சந்தையான என்.எஸ்.இ., கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டிற்கான சந்தைப்படுத்தல் பணிகளை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பரில் ஐ.பி.ஓ., வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான திட்டம் குறித்து முதலீட்டு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஐ.பி.ஓ., முழுதும் தற்போதைய பங்குதாரர்கள் தங்களிடம் உள்ள கிட்டத்தட்ட 6 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ.,வின் இதர விபரங்கள் குறித்து இன்னும் ஆலோசனை நடைபெற்று வருவதால், அவற்றில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து என்.எஸ்.இ., தரப்பில் அதிகாரப்பூர்வ கருத்து வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !