என்.எஸ்.இ.,யின் புதிய குறியீடு நிப்டி நெக்ஸ்ட் 100
தேசிய பங்கு சந்தையின் துணை நிறுவனமான என்.எஸ்.இ., இண்டீசஸ், 'நிப்டி நெக்ஸ்ட் 100' என்ற புதிய பங்கு சந்தை குறியீட்டை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த குறியீட்டில், 'நிப்டி நெக்ஸ்ட் 50' குறியீட்டிலிருந்து 50 பங்குகளும், 'நிப்டி மிட்கேப் 150' குறியீட்டிலிருந்து கடந்த 6 மாதங்களாக சந்தையில் அதிக மதிப்புடன் வர்த்தகமாகி வரும் 50 நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 100 பங்குகள் இடம்பெறும். இந்த புதிய குறியீடு, இ.டி.எப்.,கள், இண்டெக்ஸ் பண்டுகள் மற்றும் பிற பாசிவ் முதலீட்டு தயாரிப்புகளுக்கான முக்கிய பெஞ்ச்மார்க் குறியீடாக பயன்படும் என்று என்.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அடிப்படை தேதி : 1.10.2010 அடிப்படை மதிப்பு: 1,000 குறியீடு மறுசீரமைப்பு: ஆண்டுக்கு இருமுறை (மார்ச், செப்டம்பர்)