மேலும் செய்திகள்
தொழில் துறை உற்பத்தி டிசம்பரில் 7.80% வளர்ச்சி
29-Jan-2026
ஓ லா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பங்குகள், நேற்றைய வர்த்தக நேர முடிவில், 7 சதவீதம் சரிவை கண்டு, இதுவரை இல்லாத அளவுக்கு பங்கு விலை 28.80 ரூபாயாக குறைந்தது. மின்சார இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஓலா எலெக்ட்ரிக், டிசம்பருடன் முடிந்த மூன்றாவது காலாண்டில், 470 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தது. முந்தைய ஆண்டு, இதே காலத்தில், 1,045 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில், இது 55 சதவீத சரிவாகும். கடந்த 2024 ஆகஸ்டில், பங்குச் சந்தையில் 76 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் பங்கு விலை, 62 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. மேலும், தற்போதைய விலையில் இருந்து கிட்டத்தட்ட 35 சதவீதம், அதாவது, பங்கு விலை 20 ரூபாய் என்ற அளவுக்கு சரியக்கூடும் என 'எம்காய் குளோபல்' நிறுவனம் கணித்துள்ளது.
29-Jan-2026