எஸ்.ஐ.பி.,யில் எந்த தேதியில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும்?
'ஒயிட்ஓக் கேப்பிடல்' மியூச்சுவல் பண்டு நிறுவனம், தனது அறிக்கையில் இந்த கேள்விக்கான விடையை தந்துள்ளது. அதன் பதில் சிலருக்கு ஆச்சரியத்தையும் பலருக்கு அதிர்ச்சியையும் கூட தரலாம். அதன் பதில் இதுதான்: நீண்ட கால எஸ்.ஐ.பி., முதலீட்டிற்கு, நாம் எந்த தேதியில் முதலீடு செய்கிறோம் என்பது, எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நமது சம்பளம் வரும் தேதியை ஒட்டி முதலீடு செய்வதே நடைமுறைக்கு உகந்தது. கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலான குறியீட்டு தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், வெவ்வேறு தேதிகளில் செய்யப்பட்ட 10 ஆண்டு எஸ்.ஐ.பி., முதலீடுகளின் சராசரி வருமானத்தில், பெரிய வித்தியாசம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி; மாதாந்திர, வாராந்திர அல்லது தினசரி முதலீடுகள் அனைத்தும் நீண்ட காலத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வருமானத்தையே கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. நமக்கு ஆச்சரியம், ஒரு மியூச்சுவல் பண்டு நிறுவனமே இதை தெரிவித்திருப்பது தான்!