உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பி.எப்., ஆன்லைன் சேவைகள் மூன்று நாட்கள் செயல்படாது

 பி.எப்., ஆன்லைன் சேவைகள் மூன்று நாட்கள் செயல்படாது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது ஆன்லைன் சேவைகளை ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. பி.எப்., அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய மென்பொருள் மற்றும் இணையதள மேம்பாட்டு பணிகளுக்காக இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26 நள்ளிரவு 00:00 மணி முதல் ஜூன் 28 இரவு 23:59 மணி வரை பி.எப்., இணையதளம் செயல்படாது. மீண்டும் ஜூன் 29 முதல் சேவைகள் வழக்கம் போல் தொடங்கும். இந்த மூன்று தினங்களில் புதிய ஆன்லைன் கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியாது. மேலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள பி.எப்., பணம் எடுத்தல் மற்றும் மாற்றுதல் போன்ற பணிகளும் தற்காலிகமாக தாமதமாகும். அவசர உதவி தேவைப்படுபவர்கள் '14470' என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை