உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / பாசிட்டிவ் செய்திகள் வந்தால் வேகமாக மீளக்கூடும்

பாசிட்டிவ் செய்திகள் வந்தால் வேகமாக மீளக்கூடும்

நிப்டி வ ர்த்தகம் ஆரம்பிக்கும்போது பெரியதொரு இறக்கம் வரக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி, மதியம் வரை சிறிய இறக்கத்துடன் தாக்குப்பிடித்தது நிப்டி. பிறகு இரண்டு மணிக்கு வேகமான இறக்கத்தை சந்தித்து, இறுதியில் 124 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):52.60 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):1.89 என இருப்பதால், ஏற்றம் வருவதற்கு, நிப்டி முதலில் 25,230 என்ற அளவிற்கு மேலே சென்று வர்த்தகம் ஆகவேண்டும். இந்த நிலைக்கு கீழேயே வர்த்தகம் நடந்தால், இன்னமும் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட நாள் அடிப்படையில், 'எச்-1பி' விசா பிரச்சினையின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்ற யூகங்கள் இருப்பதால், பாசிட்டிவ் செய்தி ஏதாவது வந்தால், நிப்டி மீண்டும் ஏற்றப்பாதையில் பயணிக்க வாய்ப்புள்ளது. நிப்டி பேங்க் நா ளின் ஆரம்பத்தில் இருந்து மதியம் இரண்டு மணிவரை சற்று ஏற்றத்தைக் கண்ட நிப்டி பேங்க், அதன் பின்னர் நிப்டியுடன் ஒத்துப்போகும் விதமாக, சரிவினை சந்தித்து, நாளின் இறுதியில் 174 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 183.47 ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 54.47 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 2.24 என்ற அளவில் இருக்கும் நிலைமையில் ஏற்றம் வருவதற்கு 55,390 என்ற அளவுக்கு மேலே சென்று வர்த்தகம் நடப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி