உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  தபால் துறை - பி.எஸ்.இ., வினியோகத்தில் கைகோர்ப்பு

 தபால் துறை - பி.எஸ்.இ., வினியோகத்தில் கைகோர்ப்பு

இந்தியா முழுதும் மியூச்சுவல் பண்டு திட்டங்களை வினியோகிக்க, தபால் துறை, மும்பை பங்குச்சந்தை உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், நேற்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்தியா முழுதும் தபால் துறையிடம் 1.64 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக, நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் மியூச்சுவல் பண்டு திட்டங்கள் சென்றடையும். இதற்கு, தபால் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் சான்றளிக்கப்பட்ட மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்களாக, பி.எஸ்.இ.,யின் ஸ்டார் எம்.எப்., தளம் வாயிலாக செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ