உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ரேஞ்ச் பவுண்டு வர்த்தகத்துக்கான வாய்ப்பு தெரிகிறது

 ரேஞ்ச் பவுண்டு வர்த்தகத்துக்கான வாய்ப்பு தெரிகிறது

காலையில் இருந்தே சீரான இறக்கத்தை தொடர்ந்து கண்ட நிப்டி, நாளின் இறுதியில், 365 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால் கேப் 250' குறியீடு, குறைந்தபட்சமாக 1.19 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.63 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு குறைந்தபட்சமாக 0.46 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 2.56 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,248 பங்குகளில், 831 ஏற்றத்துடனும்; 2,307 இறக்கத்துடனும்; 110 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20, 50, மற்றும் 100 நாள் சராசரிகளுக்கு கீழே (இ.எம்.ஏ.,) ஒரே நாளில் சென்றுவிட்டது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., போன்றவை கன்சாலிடேஷன் நடப்பதைப்போன்ற தோற்றத்தையே காட்டுகிறதே தவிர இறங்கும் டிரெண்ட்டாக மாறிவிட்ட தோற்றத்தை தற்போதுவரை காட்டவில்லை. இதனால் 25,350 முதல் 25,650-க்கு இடைப்பட்டு, வர்த்தகமாக (ரேஞ்ச் பவுண்டு) வாய்ப்புள்ளது. ஒருவேளை 25,300-க்கு கீழே சென்றால் 25,000 வரை சென்று திரும்ப டெக்னிக்கலாக வாய்ப்புள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி