உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டிபாசிட் டோக்கனைசேஷன் சோதனை இன்று முதல் ஆர்.பி.ஐ., துவங்குகிறது

டிபாசிட் டோக்கனைசேஷன் சோதனை இன்று முதல் ஆர்.பி.ஐ., துவங்குகிறது

இ ன்று முதல், 'டிபாசிட் டோக்கனைசேஷன்' என்ற சோதனை முயற்சியில், நமது ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. இந்த முயற்சியில், ரிசர்வ் வங்கியோடு வேறுசில வங்கிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும் என்று தெரிவித்தார், தலைமை பொது மேலாளரான சுவேந்து பாடி. நீங்கள் உங்கள் வங்கியில் ஆயிரம் ரூபாய் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது வங்கியின் பதிவேட்டில் பதியப்படும். அந்தப் பணத்தை மற்றொரு நபருக்கோ, வங்கிக்கோ மாற்றினீர்கள் என்றால், அந்தச் செய்தி, ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட், யு.பி.ஐ. வாயிலாக போய் சேர்ந்து, உங்கள் வங்கிப் பதிவேட்டில் அந்தத் தொகை கழிக்கப்படும். இவை அனைத்தும் ஆர்.பி.ஐ.யின் வங்கிக் கட்டமைப்பின் வாயிலாக நடைபெறும். இது உடனே நடைபெறாது. சற்று நேரம் ஆகும். டோக்கனைசேஷன் என்பது இது அனைத்தையும் மாற்ற வல்லது. அதாவது, உங்கள் ஆயிரம் ரூபாய்க்கு இணையாக, ஆயிரம் டிஜிட்டல் டோக்கன்கள் வழங்கப்படும். இது ப்ளாக்செய்ன் தொழில்நுட்பத்தின் வாயிலாக உருவாக்கி, வழங்கப்படும். இதை உங்களது வங்கி செய்யும். ஆர்.பி.ஐ., செய்யாது. இந்த டிஜிட்டல் டோக்கன்களை நீங்கள் வர்த்தக பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தலாம். இது உடனடியாக நடைபெறும். பழைய பணப் பரிவர்த்தனை முறை இங்கே நடைபெறாது. இந்த பரிவர்த்தனையும், செட்டில்மென்ட்டும் நடைபெற, சி.டி.பி.சி., எனும் மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி தளம் பயன்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை