உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வெகுமதி ஏர் இந்தியா

வெகுமதி ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளின் வசதிக்காக, விமான பயணத்துடன் தங்குமிடங்களையும் பதிவு செய்ய 'புக்கிங்.காம்' முன்பதிவு தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் வாயிலாக நிறுவனத்தின் செயலி மற்றும் இணையதளத்தில் 45 மொழிகளில் 3.10 கோடி தங்குமிடங்களில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யலாம். இலவச விமான பயணம் மற்றும் இருக்கை மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் மகாராஜா வாடிக்கையாளர் திட்ட உறுப்பினர்கள் இதில் செலவிடும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 5 சலுகை புள்ளிகளை பெறுவர். மேலும், நடப்பாண்டு ஜூன் 22 முதல் ஜூலை 21 வரை குறிப்பிட்ட தங்குமிடங்களில் முன்பதிவு செய்வோருக்கு 15 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை