மேலும் செய்திகள்
டிசம்பரில் வேலையின்மை 4.80% ஆனது
16-Jan-2026
வா டிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டியை, 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக ஆர்.பி.எல்., வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து, வங்கியின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் அரை சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வகை கணக்குகளுக்கு 6.50 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் இனி 6 சதவீதமாக இருக்கும். 25 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரை கணக்கில் இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த வட்டி விகித குறைப்பு பொருந்தும். புதிய வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-Jan-2026