உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  போர் பதற்றம் தணிந்ததால் மீண்டது ரூபாய்

 போர் பதற்றம் தணிந்ததால் மீண்டது ரூபாய்

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வந்த இந்திய ரூபாய் மதிப்பு, நேற்றைய வர்த்தகத்தில் 50 பைசா மீண்டு, டாலருக்கு எதிராக 96.36 ஆனது. புதன் கிழமை வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 96.86 என்ற வரலாற்று சரிவை தொட்டிருந்தது. ஈரானுடனான சமாதான பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்ததை அடுத்து, மேற்கு ஆசிய போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு உயர்ந்ததாக அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர். கச்சா எண்ணெய் விலையில் இருந்த அழுத்தம் சற்று குறைந்துள்ளதும், ரூபாய் மதிப்பு உயர காரணமாக உள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை