உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.பி.ஓ., வெளியிடும் திட்டமில்லை சாம்சங் நிறுவனம் அறிவிப்பு

 ஐ.பி.ஓ., வெளியிடும் திட்டமில்லை சாம்சங் நிறுவனம் அறிவிப்பு

ஹூண்டாய், எல்.ஜி., போன்ற தென்கொரிய நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வரும் நிலையில், தங்களுக்கு இப்போதைக்கு அத்தகைய எண்ணம் இல்லை என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்களின் கிளை நிறுவனத்தை பட்டியலிடும் எண்ணம் தற்போது இல்லை என்று சாம்சங் தென்மேற்கு ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜே.பி.பார்க் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகளவில் புகுத்துவதே நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்த அவர், விற்பனையை அதிகரிக்க, தற்போது, ஸ்மார்ட் போன்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா இ.எம்.ஐ., வசதியை, இனி டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களுக்கும் வழங்க திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை