ஐ.பி.ஓ., வெளியிட 4 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல்
'சோஹன் லால் கமாடிட்டி மேனேஜ்மென்ட், ஈஸ்வரி குளோபல் மெட்டல் இண்டஸ்ட்ரீஸ், கல்ட்.பிட், இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச்' ஆகிய நான்கு நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. 1. கல்ட்.பிட் 'கல்ட்.பிட்' நிறுவனம் கிட்டத்தட்ட 950 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளையும், ஓ.எப்.எஸ்., முறையில் 17.86 கோடி பங்குகளையும் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது. ஓ.எப்.எஸ்.,வெளியீட்டில் பல்வேறு அன்னிய முதலீட்டாளர்களும், இணை நிறுவனர் முகேஷ் பன்சால், பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஆகியோரும் பங்குகளை விற்க இருக்கின்றனர். 2. ஈஸ்வரி குளோபல் கோவையை சேர்ந்த 'ஈஸ்வரி குளோபல் மெட்டல் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் உலோகங்களை மறுசுழற்சி மற்றும் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளையும், ஓ.எப்.எஸ்., முறையில் 1.32 கோடி பங்குகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.