உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / கே.ஒய்.சி., விதிகளை மாற்றியது செபி

கே.ஒய்.சி., விதிகளை மாற்றியது செபி

பங்கு மற்றும் மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் புதிய கணக்கு தொடங்குவதை எளிதாக்கும் வகையில், கே.ஒய்.சி., விதிகளை செபி எளிமையாக்கி உள்ளது. இந்த புதிய விதிகள் வரும் டிசம்பர் 24 முதல் அமலுக்கு வருகின்றன. தற்போது முதலீட்டாளர்கள் புதிதாக ஒரு கணக்கு தொடங்கும்போது, கூடுதல் கே.ஒய்.சி., விபரங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, முதலீட்டாளரின் விபரங்களை ஒருங்கிணைத்து, கே.ஒய்.சி., பதிவு ஏஜென்சிகளில் சேமிக்க செபி உத்தரவிட்டுள்ளது.

மாற்றங்கள்

1 முகவரி உள்ளிட்ட விபரங்கள் அரசு ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட்டால், அது ‘சரிபார்க்கப்பட்டது’ என குறிக்கப்படும். இதை செபி பதிவு பெற்ற பிற நிறுவனங்களும் பயன்படுத்தலாம். மீண்டும் சரிபார்க்க தேவை இல்லை. 2 முதலீட்டாளர்கள் பெயரை மாற்ற விரும்பும்போது, பு திய பெயர் ஏற்கனவே ஆதார் மற்றும் பான் அட்டைகளில் புதுப்பிக்கப்பட்டிருந்தால், தனியாக சட்டப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக் க தேவையில்லை 3 மொபைல் எண் ஏற்கனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, கே.ஒய்.சி., பதிவு ஏஜென்சிகளிடம் சரிபார்க்கப்பட்டி ருந்தால், புதிய கணக்கு தொடங்க மீண்டும் மொபைல் சரிபார்ப்பு செய்ய வேண்டியதில்லை. 4 முதலீட்டாளர் தனது கணக்கை மூடினால், அது குறித்த தகவலை சந்தை நிறுவனங்கள் 5 வேலை நாட்களுக்குள் கே.ஒய்.சி., பதிவு ஏஜென்சிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றங்களால், புதிய கணக்கு களை கூடுதல் ஆவணங்கள் இன்றி விரைவாகவும், எளிதாகவும் தொடங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ