உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / கட்டண விதிகளை சீரமைக்கிறது செபி

கட்டண விதிகளை சீரமைக்கிறது செபி

மி யூச்சுவல் பண்டு கட்டண விதிகளைப் பெரிய அளவில் சீரமைக்க செபி முன்மொழிந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் விதிகளை எளிதாக்குவது, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் முதலீட்டாளர்களுக்கான செலவுகளைக் குறைப்பது ஆகும்.

முக்கிய முன்மொழிவுகள்

* பண்டு நிறுவனங்கள் முன் வசூலிக்க அனுமதிக்கப்பட்ட கூடுதல் 5 அடிப்படை புள்ளிகள் கட்டணம் நீக்கப்படும். இது விநியோகச் செலவுகளை ஈடுசெய்ய 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. * ஜிஎஸ்டி போன்ற சட்ட ரீதியான வரிகள் ஒட்டுமொத்த செலவு விகித உச்சவரம்பிலிருந்து விலக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் அரசாங்க வரிகளில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாக முதலீட்டாளர்களிடம் சென்றடையும். * முதலீட்டாளர்களிடம் வசூலிக்கப்படும் தரகு மற்றும் பரிவர்த்தனை கட்டணங்களுக்கான உச்ச வரம்புகள் கடுமையாக்கப்படும். இந்த முன்மொழிவுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, நவம்பர் 17 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ