மேலும் செய்திகள்
மின் கட்டணத்தால் ஜவுளித் தொழில்துறை பின்னடைவா?
22-Feb-2026
பி .எம்.எஸ்., எனப்படும் போர்ட்போலியோ மேலாண்மை சேவைகளுக்கான விதிமுறைகளில் விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என, செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.இதற்கான முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள், வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.பி.எம்.எஸ்., சேவைகள் துறை சார்ந்த கருத்தரங்கு ஒன்றில் பாண்டே பேசியதாவது:இத்துறையில் முதலீட்டாளர்களுக்கான வெளிப்படைத்தன்மை மேம்பட்டுள்ள போதிலும், தற்போதுள்ள விதிமுறைகளை புதிய கோணத்தில் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் விரிவாக மறுஆய்வு செய்து வருகிறோம்; இதில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான விதிகள் மற்றும் செட்டில்மென்ட் விதிமுறைகளும் அடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
* பி.எம்.எஸ்., சேவை வழங்கும் நிறுவனம் கட்டாயமாக செபியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் * நிறுவனத்தின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு 5 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் * முதலீட்டு நோக்கம், ஆபத்து நிலை, கட்டண விபரம் போன்றவை தெளிவாக எழுதப்பட வேண்டும் * வசூலிக்கப்படும் கட்டணங்கள் முன்கூட்டியே தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும் * முதலீட்டு லாபத்தை அடிப்படையாக கொண்டு விதிகளின்படி, கட்டணம் வசூலிக்கலாம் * முதலீட்டாளருக்கு காலாண்டுக்கு ஒருமுறை அறிக்கை வழங்க வேண்டும் * முதலீட்டாளரின் பணம் நிறுவனத்தின் பணத்திலிருந்து தனியாக வைத்திருக்க வேண்டும் * விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனி பொறுப்பாளர் இருக்க வேண்டும் * முதலீட்டில் உள்ள ஆபத்துகள் முழுமையாக முன்பே தெரிவிக்கப்பட வேண்டும் * உறுதியான லாபம் கிடைக்கும் என்று கூறுவது சட்ட விரோதம்.
22-Feb-2026