உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  செபியின் புதிய கருடா திட்டம்

 செபியின் புதிய கருடா திட்டம்

ஏ .ஐ.எப்., எனப்படும் 'ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டு' நிறுவனங்கள், தங்களது திட்டங்களை விரைவாக தொடங்க, செபி 'கருடா' எனும் புதிய நடைமுறையை பரிந்துரைத்து உள்ளது. முக்கிய அம்சங்கள்  புதிய திட்டங்களை தொடங்க தற்போதுள்ள 30 நாட்கள் காத்திருப்பு காலம், இனி 10 வேலை நாட்களாக குறைக்கப்படும்  தகுதிவாய்ந்த பெரிய முதலீட்டாளர்களுக்கான பிரத்யேக திட்டங்கள் மற்றும் ஏஞ்சல் பண்டுகள், விண்ணப்பித்த உடனேயே செயல்பாட்டிற்கு வரலாம். இவர்களுக்கு 'மெர்ச்சன்ட் பேங்கர்' அவசியமில்லை  இந்த திட்டத்தின் வெளிப்படைத்தன்மைக்கு நிறுவனத்தின் சி.இ.ஓ., மற்றும் அமல்படுத்தும் அதிகாரிகளே முழு பொறுப்பு  இந்தியாவில் ஏ.ஐ.எப்., பண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் 732லிருந்து 1,849 ஆக உயர்வு (150% வளர்ச்சி)  ஏ.ஐ.எப்., வாயிலாக முதலீடு செய்வதாக உறுதியளிக்கப்பட்ட மொத்த தொகை 15.74 லட்சம் கோடி ரூபாய்  இதில் 6.45 லட்சம் கோடி ரூபாய் ஏற்கனவே நேரடியாக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது  இந்த கருடா திட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் ஜூன் 1ம் தேதி வரை தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி